Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய விருது பெற்ற இயக்குனரின் ஓரினச் சேர்க்கையாளராக மனோஜ் பாஜ்பாய்

தேசிய விருது பெற்ற இயக்குனரின் ஓரினச் சேர்க்கையாளராக மனோஜ் பாஜ்பாய்
, வியாழன், 5 மார்ச் 2015 (15:59 IST)
ஷாகித் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற ஹன்சல் மேத்தா, அலிகார் என்ற படத்தை இயக்குகிறார். இதில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.
 
ஹன்சல் மேத்தாவின் படங்கள் விமர்சகர்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் கடைசியாக இயக்கிய சிட்டி லைட்ஸ் திரைப்படம், மெட்ரோ மனிலா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் (மெட்ரோ மணிலா குறித்த விரிவான கட்டுரையை நமது தளத்தில் உலக சினிமா பகுதியில் காணலாம்).
 
அலிகார் படத்தில் மனோஜ் பாஜ்பாய் ஓரினச்சேர்க்கை பழக்கமுள்ள பேராசிரியராக நடிக்கிறார். இதற்காக தலைமுடி, மீசை, தாடி நரைத்த புதிய தோற்றத்துக்கு பாஜ்பாய் மாறியுள்ளார்.
 
ஸ்ரீனிவாஸ் ராம்சந்திரா சிராஸ் என்ற பேராசிரியர் ஓரினச்சேர்க்கைக்காக பணிக்காலம் முடியும் முன்பே வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அலிகார் தயாராகிறது.

Share this Story:

Follow Webdunia tamil