Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை குன்றி உயிருக்கு ஊசலாடும் KGF நடிகை!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (20:40 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 வெளியாகி அதுவும் மாபெரும் வெற்றி படைத்தது வரலாற்று சாதனை படைத்தது. 
 
இப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். 
அது குறித்த வீடியோவில், உங்களுக்கு ஒற்றை தலைவலி இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மருத்துவமனைக்கு செல்லுங்கள்" என்று அறிவுரை கூறியிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது ஒற்றை தலைவலிக்கு  மருத்துவரை பரிந்துரை இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அது தலைவலியைவிட வேறு ஒரு பிரச்சனையை கொண்டு செல்லும். அப்படி எடுத்துக்கொண்டால் என்னை போல் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் வந்துவிடும் என்று கூறியதுடன் முகம் வீங்கிய படி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அவரது உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பார்த்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். இவர் தமிழில் பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments