Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீரின் ''லால்சிங் சத்தா'' படம் குறித்து கங்கனா கருத்து...

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:07 IST)
அமீரின் ''லால்சிங் சத்தா'' படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நடிகை கங்கனா இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவில் தங்கம், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன்யையக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஆனால், இப்படம் ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தில் ரீமேக் அதனால் இப்படத்தைப் புறக்கணிக்காதீர்கல் என அமீர்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

லால்சிங் சத்தா படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நடிகை கங்கனா இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,  இந்த ஆண்டு வெளியான இந்திப் படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. ஹாலிவுட் ரீமேக்கும் எடுபட வாய்ப்பில்லை. இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவார்கள்.இங்கு இந்துவோ முஸ்லிமோ கிடையாது. படம் பார்க்க வருபவர்களை பாலிவுட் சினிமாத்துறை அறிந்துகொள்ள வேண்டும். இப்படம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு அமீர்கானே பின்னணியில் இருந்து செயல்படலாம். எனவே மதம் பற்றிப் பேசாமல் சிறந்த நடிப்பையும் சிறந்த படைப்பையும் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் அளித்த ஒரு பேட்டியில், இந்த நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துள்ளதால், என் மனைவி வேறு நாட்டிற்குச் செல்லலாம் என கூறியதாகத் தெரிவித்திருந்தார். அப்போது இவருக்கும் எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அமீரின் லால்சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments