Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகி போட்டியில் சுஸ்மிதா சென் அணிந்திருந்த உடையின் பின்னால் இவ்வளவு வறுமையா...?

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:54 IST)
1994ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் சுஷ்மிதா சென். அதையடுத்து தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் உருவான ‘ரட்சகன்’ படத்தில் மூலம் கதாநாயாகியாக அறிமுகமானார். பின்னர் இங்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் பாலிவுட் பக்கம் சென்று ஆண்டு ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது அழகி பட்டத்தின் போது தான் அணிந்து சென்ற உடை குறித்து குடும்ப சூழ்நிலை குறித்தும் பேட்டி ஒன்றில் பேசிய சுஸ்மிதா, " பெரும்பாலும் அழகிப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் ஃபேஷன் டிசைனரின் உதவியுடன் மிகவும் விலை உயர்ந்த உடைகளை அணிந்தார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால்,  டெல்லி  சரோஜினி நகர் மார்க்கெட்டில் எனக்கு தேவையான 4 உடைகளை வாங்கி அங்கிருந்து ஒரு ட்ரைலரிடம் கொடுத்து எனக்கு ஏற்றவாறு தைத்துக்கொண்டேன்.

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் மற்றவர்களை போன்று உடை அணிய என்னிடம் வசதி இல்லை. அப்போது என் அம்மா என்னிடம் "  நீ என்ன  உடை அணிந்து வருகிறாய் என்று யாரும் பார்க்க மாட்டார்கள். உன்னைத் தான் அவர்கள் பார்ப்பார்கள் ." என்று எனக்கு தைரியம் கொடுத்து என்னை அனுப்பினார். எனவே, அழகிப் போட்டியை வெல்ல பணம் முக்கியமல்லை லட்சியமும்,நம்பிக்கையும் தான் முக்கியம் என்று சுஷ்மிதா அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்த அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments