Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் பரினீதி சோப்ரா

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் பரினீதி சோப்ரா

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் பரினீதி சோப்ரா
, வியாழன், 9 ஜூன் 2016 (17:29 IST)
இந்திப் படங்களில் தமிழ் கதாபாத்திரங்களை இடம்பெறச் செய்வது அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் வெற்றிப் படம், சென்னை எக்ஸ்பிரசில் நாயகி தீபிகா தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பெண். 


 
 
அதேபோன்றதொரு கதாபாத்திரத்தில் பரினீதி சோப்ராவும் நடிக்கிறார்.
 
அக்ஷய் ராய் இயக்கும் மேரி பியாரி பிந்து படம் தமிழ் பெண் பிந்துவுக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞனுக்கும் நடுவில் ஏற்படும் காதல் கதை. பிந்து கதாபாத்திரத்தில் பரினீதி சோப்ரா நடிக்கிறார். கொல்கத்தா இளைஞனாக ஆயுஷ்மான் குரானா. 
 
இந்தப் படத்தில் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக பிந்து கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பரினீதி சொந்தக் குரலில் ஒரு பாடலும் இந்தப் படத்துக்காக பாடியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங்கை கலக்கும் சல்மானின் பஜ்ரங்கி பைஜான்