Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹேமமாலினி இப்படி பேசலாமா?

ஹேமமாலினி இப்படி பேசலாமா?
, சனி, 8 அக்டோபர் 2016 (16:23 IST)
பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்ற வன்முறை கும்பல்களின் அதிகாரப்பேச்சுக்கு பாஜக-வும், அதன் தலைவர்களும் ஆதரவு தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று. அத்தகைய விஷ வார்த்தைகளை தேன் தடவி பேசியிருக்கிறார் நடிகை ஹேமமாலினி.

 
நாட்டுக்காக போராடும், உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுடன் நூறு சதவீதம் நான் இருப்பேன். ஒரு நடிகையாக அவர்களது (பாகிஸ்தான் நடிகர்கள்) நடிப்பை பாராட்டுகிறேன். ஆனால், பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிப்பதற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன்.
 
அவர்கள் நல்ல நடிகர்கள் தான். இந்திய மொழி படங்களில் அவர்கள் நன்றாக தான் நடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. சமீபத்தில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி ஆதாரம் கேட்பது விரும்பத்தகாதது என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரண் ஜோஹர் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்