Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஸ்டேட்ஸ் - 2014-ன் மூன்றாவது அதிக ஓபனிங்

2 ஸ்டேட்ஸ் - 2014-ன் மூன்றாவது அதிக ஓபனிங்
, ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (17:06 IST)
ஹிந்தி சினிமாவின் யங் கன்ஸ் அர்ஜுன் கபூர், அலியா பட் நடித்த 2 ஸ்டேட்ஸ் எதிர்பார்த்தபடி நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.
2 ஸ்டேட்ஸ் பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. சேத்தன் பகத்தின் நாவலை தழுவி இதற்கு முன் எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ், கை போ சே இரண்டும் மிகப்பெரிய ஹிட் என்பதால் 2 ஸ்டேட்ஸ் மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அர்ஜுன் கபூர், அலியா பட் என்ற பெயர்கள் எதிர்பார்ப்பில் எண்ணைய் ஊற்றியிருந்தன.

இந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் நாளில் ஹிந்தியாவில் மட்டும் 12.42 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் மூன்றாவது பெரிய ஓபனிங்.
webdunia
முதலிடத்தில் சல்மான்கானின் ஜெய்ஹோ 17.75 கோடிகள். இரண்டாவது அர்ஜுன் கபூரும், ரன்வீர் சிங்கும் நடித்த குன்டே 16.12 கோடிகள். மூன்றாவது 2 ஸ்டேட்ஸ். நான்காவது இடத்தில் சன்னி லியோன் நடித்த ராகினி எம்எம்எஸ் 8.43 கோடிகள்.
 
படம் நன்றாக இருக்கிறது என்றும் சுமார் என்றும் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஓபனிங் வசூலின் ஜோர் சில தினங்களிலேயே வடிந்துவிட வாய்ப்புள்ளதாகவே விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil