Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி கில்லியின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்

இந்தி கில்லியின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்
, செவ்வாய், 11 நவம்பர் 2014 (15:18 IST)
போனி கபூரின் முதல் மனைவியின் (இரண்டாவது மனைவி நடிகை ஸ்ரீதேவி) மகன் அர்ஜுன் கபூர், சோனாக்ஷி சின்கா நடித்துள்ள தேவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
 
அமித் சர்மா இயக்கியிருக்கும் இப்படம் விஜய் நடித்த கில்லியின் இந்தி ரீமேக்.
 
இப்படி சொல்வது அவ்வளவு சரியில்லை. காரணம் 2003 -இல் குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா ஒக்கடு என்ற படத்தில் நடித்தனர். படம் பம்பர்ஹிட். அந்தப் படத்தை தரணி விஜய்யை வைத்து தமிழில் ரீமேக் செய்தார். அதுதான் கில்லி. அதைதான் இந்தியில் தற்போது ரீமேக் செய்துள்ளனர்.
 
இந்தி படவுலகு தென்னிந்திய மசாலாப் படங்களை ரீமேக் செய்து சீரழிந்து வருவதாக வடஇந்திய மீடியாக்கள் ஒருபக்கம் ஒப்பாரி வைக்கின்றன. அதேநேரம் தொடர்ச்சியாக தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிக் கொண்டும் இருக்கின்றன. 
 
தமிழ், தெலுங்கில் ஹிட்டடித்த கில்லி இந்தியில் வெற்றி பெறுமா? தேவர் 2015 ஜனவரி 9 திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil