Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா வர்த்தகத்தின் அடுத்தக்கட்டம் - ஈரோஸுடன் இணையும் சைனா தயாரிப்பு நிறுவனம்

சினிமா வர்த்தகத்தின் அடுத்தக்கட்டம் - ஈரோஸுடன் இணையும் சைனா தயாரிப்பு நிறுவனம்
, செவ்வாய், 19 மே 2015 (16:09 IST)
உலக சினிமா வர்த்தகத்தில் சைனாவும், இந்தியாவும் முக்கிய இடம் வகிக்கின்றன. சைனாவிலிருந்து கிடைக்கும் வசூலுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒன்றுமேயில்லை என்றாலும், இந்தியா சினிமா வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத நாடாகி வருகிறது.
 
பாலிவுட் படங்களின் இரண்டாவது பெரும் சந்தையாக சைனா உள்ளது. அமீர்கானின் 3 இடியட்ஸ் சைனாவில் மிகுந்த வரவேற்புடன் ஓடிய படம். பிகே விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்திய தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல்ஸ் சைனீஸ் ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறது. 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன புத்த பிட்சு இந்தியாவில் மேற்கொண்ட நீண்ட பயணத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.
 
இந்த இந்தியா - சீனா கூட்டுத் தயாரிப்பு இந்திய சினிமா வர்த்தகத்தின் இன்னொரு வாசலை திறந்துவிட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil