Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிபோதையில் சக நடிகரை ஷூவை கழற்றி தாக்கிய நகைச்சுவை நடிகர்!

குடிபோதையில் சக நடிகரை ஷூவை கழற்றி தாக்கிய நகைச்சுவை நடிகர்!
, வியாழன், 23 மார்ச் 2017 (12:03 IST)
'தி கபில் சர்மா ஷோ' என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார் நடிகர் கபில் சர்மா. கபில் சர்மா ஷோ குழுவினர் விமானத்தில் ஆஸ்திரேலியாக்கு பயணம் மேற்கொண்டனர்.


 
 
ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் நாடு திரும்பியபோது விமானத்தில் நடந்த சம்பவத்தை பார்த்த பயணி ஒருவர்  கூறுகையில், கபில் குடிபோதையில் சக நடிகரான சுனில் குரோவரை தாக்கினார் என தெரிவித்துள்ளார். கபில் ஒரு விஸ்கி  பாட்டிலை முழுவதுமாக குடித்தார். 
 
விமானத்தில் சிப்பந்திகள் அனைவருக்கும் உணவு வழங்கினார்கள். அதனை கபில் சர்மா குழுவினர் வாங்கி சாப்பிடத்  துவங்கினர். இதை பார்த்த கபில் நான் சாப்பிடும் முன்பு நீங்கள் எப்படி சாப்பிடலாம் என்று தனது குழுவினரை திட்டினார்.  இதனால் சுனில் அவரை சமாதானம் செய்த போது, கபில் தனது ஷூவை கழற்றி அவரை அடித்தார். மேலும் சுனிலின் சட்டை  காலரை பிடித்து கன்னத்தில் பலமுறை அறைந்தார் என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் தேர்தல்: ரஜினியின் அதிரடி முடிவு!!