Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரம்ஸ் வாசிக்கும் சோனாக்ஷி சின்ஹா

ட்ரம்ஸ் வாசிக்கும் சோனாக்ஷி சின்ஹா
, ஞாயிறு, 28 ஜூன் 2015 (08:30 IST)
ட்ரம்ஸ் வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சோனாக்ஷி சின்காவின் பள்ளிப்பருவ ஆசையாம்.


 

 
அம்மாவிடம் சொன்ன போது, ட்ரெம்ஸ் ரொம்ப சத்தம், நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளும், அதனால் கிடார் பழகு என்றிருக்கிறார். ஆனால், சில நாள்களிலேயே கிடார் மீதான ஆசை சோனாக்ஷியைவிட்டு போய்விட்டது.
 
பள்ளிப் பருவத்தின் நிறைவேறாத ஆசை மனசுக்குள் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
 
முருகதாஸின் அகிரா படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்ததும் தனது நிறைவேறாத ஆசையை தேடிப் போயிருக்கிறார். ஆம், இப்போது சோனாக்ஷி ட்ரம் வாசிக்க பழகி வருகிறார்.
 
சமீபத்தில் நடந்த விருது விருது விழாவில் சோனாக்ஷி ஒரு பாடல் பாடி அனைவரையும் அசத்தினார். விரைவில் ட்ரம்ஸ் வாசித்தும் அசத்துவார் என நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil