Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சாரின் கத்திரிக்கு தப்பிய நிர்வாணப்படம்

Webdunia
புதன், 29 அக்டோபர் 2014 (12:56 IST)
சமீபத்தில் ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கையை தழுவி மலையாளத்தில் ஒரு படம் வெளிவந்தது. ரவிவர்மாவாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், அவரது காதலியாக கார்த்திகாவும் நடித்திருந்தனர். கார்த்திகாவின் கவர்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.
 
படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிற போதிலும் சமீபத்தில் என்று சொல்ல காரணம் உள்ளது.
2008 -இல் ரவிவர்மாவின் வாழ்க்கையை கேத்தன் மேத்தா திரைப்படமாக்கினார். ரங் ரசியா என்ற அந்தப் படம் அப்போது சர்ச்சையை கிளப்பியது. ரவிவர்மாவின் ஓவியங்களில் பல பெண்களின் நிர்வாண ஓவியங்கள். படத்திலும் அதனை அப்படியே கேத்தன் மேத்தா காட்சிப்படுத்தியிருந்தார். நிர்வாண ஓவியங்களை துணி போட்டு மறைப்பது ரவிவர்மாவுக்கு செய்யும் துரோகம் என்று அவர் அப்போது கூறினார்.
எதிர்ப்பு காரணமாக இதுநாள்வரை பெட்டிக்குள் இருந்த இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மக்களின் ரசனை இப்போதும் ரொம்பவும் மாறியுள்ளது. படத்தை வெளியிட இது சரியான நேரம் என்று அவர் கூறியுள்ளார். 
 
ரன்தீப் ஹுடா, நந்தனா சென் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!