Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.200 கோடி வசூல் செய்த எம்.எஸ்.தோனி

ரூ.200 கோடி வசூல் செய்த எம்.எஸ்.தோனி
, ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (12:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் தோனியை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் தோனியை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியானது.
 
இத்திரைப்படம் குறித்து தோனியின் நண்பர் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் அருண் பாண்டே கூறியதாவது:-
 
தோனியை கிரிக்கெட்டின் ஒவ்வொரு பெரிய போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒரு வீரராகவே மக்களுக்கு தெரியும்.  ஆனால் அவரது போராட்டங்கள் மற்றும் அவற்றினை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது பற்றி ஒருவருக்கும் தெரியாது, என்றார்
 
இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
 
மேலும், ஒருவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில், இந்தியாவில் அதிகமாக வசூல் செய்த சாதனையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம், மிஷ்கின் கூட்டணியில் ‘சவரக்கத்தி’ டீசர்