Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது

ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது
, செவ்வாய், 27 மே 2014 (16:33 IST)
சோனாக்ஷி சின்கா நடிக்க வந்து சில வருடங்களே ஆகிறது. அதற்குள் தனது கேரியரை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படி அமைத்தால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.
சோனாக்ஷி நடித்த பெரும்பாலான படங்கள் 100 மற்றும் 200 கோடிகள் வசூலித்தவை. தபாங், தபாங் 2, ரவுடி ரத்தோர், சன் ஆஃப் சர்தார்... இந்த மசாலா மிக்ஸுக்கு நடுவில் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு லூத்தரா. அனுராக் காஷ்யப் தயாரித்த இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க வேண்டும், மசாலா படங்களுடன் நல்ல படங்களிலும் நடித்தால் மட்டுமே கேரியரை பேலன்ஸ் செய்ய முடியும் என்றெல்லாம் தத்துவார்த்தமாக இப்போதே பேசத் தொடங்கியுள்ளார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
 
சோனாக்ஷி நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் ஹாலிடே படமும் ஒரு மசாலா படம்தான்.
 
லூத்தரா போன்ற படங்களுக்காக காத்திருப்பதாக சமீபத்திய பேட்டியொன்றில் சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil