Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஜ்ரங்கி பைஜான் - இந்தியாவில் 300 கோடிகள் வசூலிக்கும் முதல் சல்மான் படம்

பஜ்ரங்கி பைஜான் - இந்தியாவில் 300 கோடிகள் வசூலிக்கும் முதல் சல்மான் படம்
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (09:22 IST)
இந்தியாவில் அதிக 100 கோடி ரூபாய் படங்கள் தந்த நடிகர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார், சல்மான் கான். ஆனால், அவரது எந்தப் படமும் 300 கோடிகளைத் தாண்டியதில்லை. 
அந்த விஷயத்தில் அமீர் கானுக்கே முதலிடம். அவரது தூம் 3, பிகே படங்கள் 300 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளன. 
 
முதல்முறையாக சல்மானின் பஜ்ரங்கி பைஜான் 300 கோடிகளை இந்தியாவில் வசூலிக்கப் போகிறது. ரம்ஜானுக்கு வெளியான இந்தப் படம் இந்த திங்கள்கிழமைவரை 294.98 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் 300 கோடியை எட்டிவிடும் என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
 
உலக அளவில் இப்படம் திங்கள்வரை 444.98 கோடிகளை வசூல் செய்துள்ளது. 500 கோடிகளை படம் தாண்டுமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil