Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம் கோபால் வர்மா படத்தில் பாடகராகும் அமிதாப்

ராம் கோபால் வர்மா படத்தில் பாடகராகும் அமிதாப்
, வியாழன், 27 அக்டோபர் 2016 (17:03 IST)
ராம் கோபால் வர்மா சர்கார் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்து வருகிறார். அதில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
வர்மாவின் சர்கார் இந்திய நிழல் உலகப் படங்களில் ஒரு மைல் கல். அதன் இரண்டாம் பாகமாக சர்கார் ராஜ் வெளியானது. அதுவும் முதல் பாகத்தை போலவே ஹிட். இரண்டிலும் அமிதாப்பச்சன்தான் நாயகன்.
 
மூன்றாவது பாகத்தில் அமிதாப்புடன் ஜாக்கி ஷெராப்பும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல். அமிதாப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில், காலை 3 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த நான், படத்தில் பாட்டு பாடுவதற்காக புறப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருப்பது, இந்த செய்தியை உறுதி செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி பேசிய போது நழுவிய ஒட்டு மீசை : காஷ்மோரா பட விழாவில் காமெடி(வீடியோ)