Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டையை கிளப்பும் அக்ஷய்குமாரின் ஆக்ஷன் பேபி

Webdunia
புதன், 10 டிசம்பர் 2014 (12:17 IST)
ஏ வெட்னெஸ்டே, ஸ்பெஷல் 26 படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேயின் மூன்றாவது படம், பேபி. ஆக்ஷன் த்ரில்லராக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ஸ்பெஷல் 26 -இல் நடித்த அக்ஷய்குமாரே ஹீரோவாக நடித்துள்ளார். நீரஜின் முதலிரு படங்களில் நடித்த அனுபம் கெர்ரும் இருக்கிறார்.
நீரஜ் பாண்டேயின் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அவரது முதலிரு படங்கள் தந்ததால் பேபிக்கு கடும் எதிர்பார்ப்பு. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். அதிரடி ஆக்ஷன் நிறைந்த ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
 
ஜனவரி 23 வெளியாகவிருக்கும் பேபி அக்ஷய் குமாருக்கு இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்பதில் இந்தி திரையுலகுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
 
ராணா, தாப்ஸி போன்ற தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமான நடிகர்களும் இதில் இருக்கிறார்கள்.

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

Show comments