Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (15:58 IST)
நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார். திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏராளமாக பேசுகிறார்.
 
பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.
 
கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற்று நாம் தமிழர் கட்சியை தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். 
 
தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments