Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமா சிரிச்சுடுங்க Come-on.... கணவருடன் "வாத்தி கம்மிங்" நடனமாடும் ஆர்த்தி!

Webdunia
சனி, 2 மே 2020 (12:33 IST)
தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வ்ருகின்றனர். பிரபலங்கள் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கணவருடன் சேர்ந்து விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு " சத்தமா சிரிச்சுடுங்க Come-on....  Bore  அடிக்கிறவங்க கலாய்கலாம்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை: மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகம்..!

AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments