Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குத்துவதில் சூரன் நான் - அமீர் கான்

குத்துவதில் சூரன் நான் - அமீர் கான்
, திங்கள், 19 ஜனவரி 2015 (15:11 IST)
அமீர் கான் கடைசியாக நடித்த பிகே இந்தியாவில் 300 கோடிகளைத் தாண்டி இன்னும் குதிரை பாய்ச்சல் காட்டுகிறது. சரியான ஸ்கிரிப்டை தேர்வு செய்து, சொல்லி அடிப்பத்தில் அமீர் கான்தான் இந்தியின் கில்லியாக இப்போதும் திகழ்கிறார். பிகே அதற்கு சாட்சி.


 
அடுத்து இந்த மிஸ்டர் பெர்பெக்ஷன் எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்? திரையுலகமும் ரசிகர்களும் அறிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளனர்.
 
படத்துக்குப் படம் வித்தியாசமான கதையை கதைக்களத்தை தேர்வு செய்யும் அமீர் கான், அடுத்து ரெஸ்ட்லராக நடிக்கயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது குத்துச்சண்டை வீரராக நடிக்கயிருக்கிறாராம்.
 
ஹாலிவுட்டில் குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியான வாரியர் திரைப்படத்தை அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமீர் கானும் குத்துச் சண்டையை மையப்படுத்திய படத்தில் நடிக்கிறார்.
 
யாருடைய குத்து பலமாக இருக்கப் போகிறதோ.

Share this Story:

Follow Webdunia tamil