Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாடுகளில் 92 கோடிகளை வசூலித்த சுல்தான் பாய்

வெளிநாடுகளில் 92 கோடிகளை வசூலித்த சுல்தான் பாய்

வெளிநாடுகளில் 92 கோடிகளை வசூலித்த சுல்தான் பாய்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (17:53 IST)
இந்தியாவில் வசூல் சாதனை புரிவது போன்றே வெளிநாடுகளிலும் சாதனை படைத்து வருகிறது சுல்தான். திரையிட்ட அனைத்து வெளிநாடுகளிலும், வீக் எண்ட் ஓபனிங்கில் சுல்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 
 
ஓபனிங் வீக் எண்ட் சாதனையை பொறுத்தவரை தூம் 3 படம் 10.2 மில்லியன் யுஎஸ் டாலருடன் இதுவரை முதலிடத்தில் இருந்தது. சுல்தான் 13.73 மில்லியன் டாலர்களுடன் அதனை முறியடித்துள்ளது. 
 
முதல் ஐந்து தினங்களில் சுல்தான் வெளிநாடுகளில் 92 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் விரைவாக 1 மில்லியன் டாலர்களை கடந்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 
 
வார நாள்களிலும் சுல்தானின் வசூல் வேட்டை தொடர்ந்தால், இந்திய சினிமாவின் வசூல் சரித்திரத்தில் சுல்தான் மகுடம் சூட்டும் என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23 வருடங்களுக்கு பின் இணையும் சோளிக்கே பீச்சே க்யா கை கூட்டணி