Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமானத்தை சொல்லுங்க, வரியை கட்டுங்க... அமீர் கான், சல்மான் கானுக்கு நோட்டீஸ்

வருமானத்தை சொல்லுங்க, வரியை கட்டுங்க... அமீர் கான், சல்மான் கானுக்கு நோட்டீஸ்

வருமானத்தை சொல்லுங்க, வரியை கட்டுங்க... அமீர் கான், சல்மான் கானுக்கு நோட்டீஸ்
, வியாழன், 28 ஜூலை 2016 (11:59 IST)
வருமான வரித்துறை யாஷ்ராஜ் பிலிம்ஸ், சல்மான் கான் பிலிம்ஸ் மற்றும் அமீர் கான், ரன்வீர் சிங் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



நடிகர்கள் மட்டுமில்லை, நாட்டில் உள்ள அத்தனை பேரும் வருமானத்துக்கு தக்கபடி வரி கட்ட வேண்டும். உழைச்சு சம்பாதிக்கிறேnம், அரசுக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி என்று பெரும்பாலான நடிகர்கள் குஸ்தி போடுவதுண்டு. வெளிப்படையாக அல்ல சைலண்டாக. வருமானத்தை சொல்லாமலிருப்பது, குறைத்து சொல்வது அவர்களின் வாடிக்கை.

இந்நிலையில் மத்திய வருமான வரித்துறை யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் சல்மான் கான் பிலிம்ஸுக்கு வருமானத்தையும், அவர்கள் மூலம் யாருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பதை தெரிவிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமீர் கான், ரன்வீர் சிங்குக்கும் இதே போல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

திரையில் நேர்மையாளராக நடந்து கொள்ளும் நடிகர்களே... நேர்மையாக வருமான வரியையும் கட்டிவிடுங்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2017 -இல் பிளேட் ரன்னர் படத்தின் சீக்வெல்