Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணி முகர்ஜி போட்ட போடு - ஜகா வாங்கிய அமீர்கான்

ராணி முகர்ஜி போட்ட போடு - ஜகா வாங்கிய அமீர்கான்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:06 IST)
ராணி முகர்ஜியின் நடிப்பில் வெளிவந்த மர்தானி படம் நன்றாக இருந்தாலும் அதிலுள்ள வன்முறை, கொச்சை வசனங்கள் காரணமாக குழந்தைகள் படத்தை பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அமீர்கான் கூறியது பெரும் சர்ச்சையானது.
 

ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸில் தள்ளாடிக் கொண்டிருக்க, அமீரின் விமர்சனம் காரணமாக வசூல் மேலும் கீழிறங்கும் நிலை. மர்தானி செகண்ட் பார்ட் குறித்த கனவிலிருந்த ராணி முகர்ஜியை அமீர் கானின் கமெண்ட் வால் திருகி விட்டது.

சிறுமிகளுக்கு என்னென்ன பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்பதைப் பற்றிதான் மர்தானி பேசுகிறது. அது யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்கள்தானே முதலில் பார்க்க வேண்டும் என்று கொதித்தவர் அடுத்து சொன்னதுதான் அமீர் கானை டேமேஜ் செய்தது.
webdunia

அவர் மட்டும் நிர்வாணமாக நடிப்பார். ஆனால் மற்றவர்களின் படத்தை வன்முறை என்றும் ஆபாசம் என்றும் கொச்சைப்படுத்துவார் என பிகே படப்போஸ்டரில் அமீர் கான் நிர்வாணமாக போஸ் தந்ததை போட்டுத் தாக்க, அப்படியே ஆஃப் ஆன அமீர் கான், மர்தானியில் ராணி முகர்ஜியின் ஆக்டிங் சூப்பர் என்று ட்விட்டியிருக்கிறார்.

தேவையா இது?

Share this Story:

Follow Webdunia tamil