முதலில் படத்துக்கு பிஸ்டல் என்ற பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. இப்போது ஹாலிடே என்று மாற்றியிருக்கிறார்கள். கதாநாயகன் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது நடக்கும் கதை என்பதால் இந்தப் பெயர்.
ஹாலிடேயை மார்ச் மாதம் வெளியிடுவதாக இருந்தது ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட். இப்போது மே ஒன்றாம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள். மார்ச் மாதத்தைவிட மே யில் போட்டி குறைவு, எளிதாக அதிக வசூலை பெறலாம் என்பதற்காக இந்த மாற்றம்.
2014 வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஹாலிடேயும் இடம் பிடித்திருக்கிறது.