Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரியங்காவின் பன்ச் முடிந்தது அடுத்து நாக் அவுட்

Webdunia
புதன், 23 ஜூலை 2014 (19:41 IST)
ப்ரியங்கா சோப்ராவின் மேரி கோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டீஸர் இரண்டும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளன. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்கள் வைத்த பெயர் மேரி கோம் பன்ச்.
 
மேரி கோம் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச் சண்டை வீராங்கனை. அவரது வாழ்க்கை வரலாறுதான் மேரி கோம் திரைப்படம். அதில் மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். Viacom18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு. இணை தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.
கரடு முரடான மேரி கோம் கதாபாத்திரத்தில் பாலீஷ் செய்யப்பட்ட மெழுகுச்சிலையாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா எப்படி செட்டாவார் என்று அனைவருக்கும் சந்தேகம். அதனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீஸரும் அடித்து நொறுக்கியுள்ளது. தீவிரமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் எல்லாம் வைத்துள்ளார் ப்ரியங்கா. அத்துடன் தோற்றத்திலும் அப்படியொரு மாற்றம். டீஸரை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றனர். அதற்கு மேரி கோம் பன்ச் என்று வைத்தது சாலப் பொருத்தமான பெயர்.
 
வரும் 24 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர். இதில்தான் மேரி கோமாக ப்ரியங்கா எப்படி மாறியுள்ளார் என்பது முழுதாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேரி கோம் நாட்அவுட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
ப்ரியங்காவின் டெடிகேஷனுக்கு ஏற்ற பெயர்தான்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments