Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படம் வெளியாகும் முன்பே கோடிகளின் மழையில் ஷாருக்கான்

படம் வெளியாகும் முன்பே கோடிகளின் மழையில் ஷாருக்கான்
, புதன், 30 ஜூலை 2014 (11:58 IST)
திறமையோடு தொழிலும் தெரிந்தவர் ஷாருக்கான். சினிமா, விளம்பரம், கிரிக்கெட் அணி என்று கிடைக்கிற சந்திலெல்லாம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வருமானத்தில் இவர் ஹாலிவுட்டின் டாப் ஸ்டார் டாம் க்ரூஸை பின்னுக்கு தள்ளியிருப்பது முக்கியமானது.
படம்தோறும் ஷாருக்கானின் பண மழையும் தீவிரம் பிடிக்கிறது. அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், ஃபரா கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹேப்பி நியூ இயர். ஓம் சாந்தி ஓம் படத்தின் பம்பர் ஹிட்டுக்குப் பிறகு ஃபரா கான், ஷாருக்கான், தீபிகா படுகோன் இணைந்திருக்கும் படம். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு.
 
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை புரமோட் செய்யும் விதமாக உலகமெங்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவிருக்கிறார். இந்த கட்டண கலை நிகழ்ச்சிகளின் மூலம் 200 கோடிகளை வசூலிப்பது ஷாருக்கானின் திட்டம். படத்தை விளம்பரப்படுத்த அனைவரும் காசு செலவளிக்கையில் விளம்பர நிகழ்ச்சியிலேயே 200 கோடி சம்பாதிக்கிற மூளை ஷாருக்கானுக்கு மட்டுமே உரியது.
 
மேலும், படத்தின் திரையரங்கு உரிமையை 125 கோடிகளுக்கு விற்றுள்ளார் ஷாருக். படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் 65 கோடிகள் கிடைத்துள்ளது. ஆடியோ ரைட்ஸில் இன்னொரு 12 கோடி. இதிலேயே 200 கோடியை தாண்டிய வசூல். படுத்தே ஜெயிக்கிற மாதிரி படத்தை வெளியிடாமலே பல கோடிகள் லாபம். 
 
அதிர்ஷ்ட தேவதைக்கு பாலிவுட் பாட்ஷா மீது அப்படியென்ன மையலோ.
 
 

Share this Story:

Follow Webdunia tamil