Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணி கடத்தலில் ஈடுபடும் ஷாருக்...?

தண்ணி கடத்தலில் ஈடுபடும் ஷாருக்...?
, வியாழன், 13 மார்ச் 2014 (19:33 IST)
ஷாருக்கானின் புதிய படத்தில் அவருக்கு ஜோ‌டியாக சோனம் கபூர் நடிக்க உள்ளார். இந்த வருட மத்தியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
FILE

ஷாருக் தற்போது ஃபரா கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் ஹீரோயின். ஓம் சாந்தி ஓம் படத்துக்குப் பிறகு இந்த முக்கூட்டணி ஒன்றிணைவதால் வசூல் 200 கோடியா இல்லை முந்நூறு கோடியா என்று அனைவர் மனதிலும் ஓர் எதிர்பார்ப்பு.

ஹேப்பி நியூ இயருக்கு அடுத்து Raees என்ற படத்தில் நடிக்க உள்ளார். ராகுல் டோலகியா இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோயின் சோனம் கபூர். அவருடன் ஷாருக் நடிப்பது இதுவே முதல்முறை.

படத்தில் ஷாருக் பஞ்சாபியாக வருகிறார். ஆல்கஹால் கள்ளக்கடத்தலில் ஈடுபடும் வேடம் என்கிறது படயூனிட். பாக் மில்கா பாக்கில் நடித்த ஃபர்கன் அக்தர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலக வேறு ஆளை தேடி வருகிறது படக்குழு.

இந்த வருட மத்தியில் படப்பிடிப்பை தொடங்கி 2015 ரமலான் பண்டிகைக்கு படத்தை வெளியிடுகிறார்கள். ஷாருக்கானின் புதிய கெட்டப்புக்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்கப் கலைஞர்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil