Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண் ஜோ‌ஹரின் தயாரிப்பில் சல்மான் கான் - ஒரு சர்ப்ரைஸ் கூட்டணி

Webdunia
சனி, 19 ஜூலை 2014 (19:39 IST)
கரண் ஜோ‌ஹரின் Shhuddhi  திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இந்த புதிய கூட்டணி பாலிவுட்டில் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.
 
Shhuddhi  படத்தில் முதலில் ஒப்பந்தமானவர்கள் ஹிர்த்திக் ரோஷனும், கரீனா கபூரும். இந்நிலையில் திடீரென படத்திலிருந்து விலகினார் ஹிர்த்திக். அவருடைய இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்று பாலிவுட் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. சல்மான் கான் ஒப்பந்தமானது அனைவருக்கும் வியப்பு.
கடந்த சில வாரங்களாக கரண் ஜோ‌ஹரும், சல்மானும் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகின்றனர். கரண் ஜோ‌ஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சல்மான் கலந்து கொண்டார். பார்ட்டிகளிலும் இருவரும் ஒன்றாக அதிக நேரத்தை செலவிட்டனர். இதெல்லாம் பாலிவுட்டின் புருவங்களை உயரச் செய்தது.
 
பத்து தினங்களுக்கு முன் சல்மானின் பாந்த்ரா இல்லத்துக்கு சென்று வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார் கரண். அப்போதுதான் அவரது படத்தில் சல்மான் நடிப்பது உறுதியானது. அதனை கரணும், சல்மானும் உறுதி செய்துள்ளனர்.
 
Shhuddhi  படத்தை கரணின் தர்மா புரொடக்ஷன் தயாரிக்கிறது. கரண் மல்கோத்ரா இயக்குகிறார் (அக்னிபாத் படத்தை இயக்கியவர்). 
 
சல்மான் கானின் கிக் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து நோ என்ட்ரி படத்தின் சீக்வெல், ஆதித்ய சோப்ராவின் படம், மகேஷ் மஞ்சுரேக்கர் இயக்கத்தில் ஒன்று என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் கரண் ஜோ‌ஹர் தயாரிக்கும் Shhuddhi 2016 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். சல்மான் கானுடன் நடிக்கப் போகும் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments