Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசிவரை க்ரோனிக் பேச்சிலர்தான்

கடைசிவரை க்ரோனிக் பேச்சிலர்தான்
, வியாழன், 31 ஜூலை 2014 (17:56 IST)
இந்தி மீடியாக்களுக்கு போரடிக்கும் போது சல்மான் கானின் முன்னாள், இந்நாள் காதலிகள் யார் என்று பட்டியலிடுவார்கள். திரையுலகையும், ரசிகர்களையும் என்டர்டெய்ன் செய்ய அவ்வப்போது இந்த வேலையை அவர்கள் செய்வதுண்டு.
இந்த அப்டேட் காரணமாக சல்மானின் காதலிகள் யார் என்பது ரசிகர்களுக்கு அத்துபடி. இப்போதைய கேள்வி சல்மான் கான் யாரை திருமணம் செய்து கொள்வார்?
 
ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், அசின் என்றெல்லாம் சுற்றியவர் கடைசியாக கிக் படத்தில் நடித்திருக்கும் ஜாக்குலின் பெர்னாட்ஸுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல். அவரைதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா?
webdunia
இதற்கு அதிர்ச்சியான பதிலை தந்துள்ளார் சல்மான். அதாவது திருமணத்தில் பாலிவுட்டின் பேட் பாய்க்கு விருப்பமில்லையாம். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் க்ரோனிக் பேச்சிலராகவே வாழ்க்கையை கழிக்கயிருக்கிறாராம். இந்த ஐயகோ முடிவு அவரை மானசீகமாக காதலிப்பவர்களுக்கு பலத்த அடிதான்.
 
சல்மான் கானுக்கு வரும் டிசம்பரோடு 49 வயதாவது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil