Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அத்வானியை அழ வைத்த ராம்கோபால் வர்மா படம்!

அத்வானியை அழ வைத்த ராம்கோபால் வர்மா படம்!
, வெள்ளி, 1 மார்ச் 2013 (17:08 IST)
FILE
சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா மும்பை 26/11 தாக்குதல்களை அடிப்படையாக வைத்து 'தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11' என்று படம் எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை பாஜக தலைவர் அத்வானிக்கும் போட்டுக் காட்டினாராம் ராம்கோபால் வர்மா. படத்தைப் பார்த்த அத்வானி அழுதேவிட்டார் என்று வட இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அதிசயிக்க வைக்கும் விதத்தில் படம் பிடித்துள்ளாராம் ராம் கோபால் வர்மா.

நிதின் கட்கரி விவகாரம், கட்சியில் மோடிக்கு எதிரான போக்குகள், ராம்ஜெத் மிலானி பிரச்சனை, கர்நாடக பாஜக என்று எவ்வளவு பிரச்சனைகளை கண்டும் அஞ்சாத அத்வானியே ராம்கோபால் வர்மா படத்தைப் பார்த்து கண்கலங்கியதுதான் இப்போது வட இந்திய ஊடகங்களின் பேச்சாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil