Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட... அது வெறும் நட்புதான்

அட... அது வெறும் நட்புதான்
, புதன், 9 ஏப்ரல் 2014 (15:19 IST)
யாருடன் நடித்தாலும் அவர்களுடன் காதல் கிசுகிசு கிளம்பும் கெமிஸ்ட்ரி சில நடிகைகளுக்கேயுரிய வரப்பிரசாதம். இந்தியில் சோனாக்ஷி சின்கா அப்படி. முதலில் பிரபுதேவாவுடன் - அவர் தொடர்ச்சியாக வாய்ப்பு தந்ததால் - கிசுகிசுக்கப்பட்டவர் ரா... ராஜ்குமார் படத்துக்குப் பிறகு ஷாகித் கபூருடன் இணைத்து பேசப்பட்டார்.
ஆர்...ராஜ்குமார் படத்தை இயக்கியதும் பிரபுதேவாதான். ஆனால் அந்தமுறை கெமிஸ்ட்ரி ஷாகித்கபூரை நோக்கி பாய்ந்தது. அவரும் சோனாக்ஷியும் காதலிப்பதாக இந்தி ஊடகங்கள் எழுதின. வழக்கம் போல சோனாக்ஷி அதனை மறுத்துள்ளார்.
 
எனக்கும் ஷாகித்துக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டுமே. நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார்.
 
ஷாகித்தும் ஆள் மோசமில்லை. அவரின் முன்னாள் காதலி இப்போது சைப் அலிகானின் மனைவியாகியிருக்கும் கரீனா கபூர். ப்ரியங்கா சோப்ராவுடனும் ஆழ்ந்த நட்பை சிலகாலம் ஷாகித் போஷித்து வந்ததும் முக்கியமானது.
 

Share this Story:

Follow Webdunia tamil