Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு சால்வையே மருந்தாக...!

கருப்பு சால்வையே மருந்தாக...!
மருந்து, மாத்திரை உட்கொள்ளாமல், ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வதால் நோய் குணமடைந்து விடுமா? துர்க்கையின் அருள் பெற்றதால் இதனை தன்னால் செய்ய முடியும் என்று கூறுகிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் பாய். இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதிக்காக அவரை நேரி்ல் சந்தித்தோம்.

மத்திய பிரதேசத்தின் பர்ஹன்பூர் மாவட்டத்தில் உள்ள படாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாய். இவர் நோயாளிகளை குணப்படுத்தும் முறையே விசித்திரமானது. தான் அணிந்துள்ள கருப்பு சால்வையை நோயாளியின் மீது போர்த்தி, தன் கையால் அவரை பலம் கொண்ட மட்டும் அடிக்கிறார்.

துர்க்கையின் அருள் தனக்கு உள்ளதால் எய்ட்ஸ், சர்க்கரை நோய், பக்கவாதம், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கணேஷ்பாய் கூறி வருகிறார்.

அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான மக்கள் படாகோன் கிராமத்திற்கு வருகின்றனர். ஒருவர் 3 முதல் 5 வரை இவரிடம் சிகிச்சை பெறுகின்றனர். இவரின் புகழை கேட்டு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கணேஷ் பாயிடம் சிகிச்சை பெறுவதற்காக இங்கு வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சிகிச்சை நடைபெறும் சமயத்தில் காவல் துறையினரும் அங்கு இருக்கின்றனர். அவர்கள் முன்னிலையிலேயே சிகிச்சை நடக்கிறது.

அவரிடம் சிகிச்சை பெற தினமும் நூற்றுக்கணக்கானோர் படாகோன் கிராமத்தில் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, கணேஷ் பாய் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

சிகிச்சைக்காக வருபவர்களின் நோய் குணமடைந்தது பற்றி அவ‌ருக்கே தெரியாது என்றாலும், எல்லாம் துர்கா தேவியின் அருள் மற்றும் சக்தியால் தான் நடந்தது எனக் கூறுகிறார் கணேஷ் பாய்.

webdunia photoWD
கணேஷ் பாயின் பக்தர்களில் ஒருவர் 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அந்த இடத்தில் துர்கா தேவிக்கு புதிதாக கோயில் கட்டலாம் என கணேஷ் பாய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பக்தர்களிடம் இருந்து அவர் காணிக்கையும் வசூலித்து வருகிறார்.

அறிவியலிற்கும், மருத்துவர்களுக்கும் சவால் விடும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வரும் கணேஷ் பாயின் இந்த சால்வை சிகிச்சை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அவரைத் தேடி வந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்த மாவட்ட மக்களுக்கு மருத்துவர்கள் மீது உள்ள நம்பிக்கையை விட கணேஷ் பாய் மீதான நம்பிக்கையே அதிகரித்து வருகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கணேஷ் பாய் உண்மையாகவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறாரா அல்லது உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு அப்பாவி மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறாரா. உறுதிபடுத்த முடியவில்லை.

இப்படிப்பட்ட சிகிச்சை பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், எங்களுக்கு எழுதுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil