மனித உடலில் தோன்றும் சாய்பாபா!

Webdunia
பெண் ஒருவரின் உடலில் புகுந்து பக்தர்களின் குறைகளை போக்குகிறார ்
webdunia photoWD
ஸ்ரீ சாய்பாபா- என்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டத ு உண்ட ா? மனிதர்கள் உடலில் கடவுள் புகுந்து விடுவார் என்பதைத் தான் இதுவரை நாம் அறிந்துள்ளோம். அதே அற்புதத்தை சாய்பாபாவும் நிகழ்த்துவது வியப்பாகத் தான் இருக்கும்.

இந்த வாரம் 'நம்பினால் நம்புங்கள ்' பகுதியில ் நாம் பார்க்கப்போவது மத்தியப் பிரதேச மா‌நில‌ம் தேவாஸில் இருக்கும் சாய்பாபா கோயிலைத்தான ்.

இந்தக் கோயிலின் பெண் பூசாரி இந்துமதி என்பவரின் மருமகள் ஆஷா துர்கானேவின் உடலுக்குள்தான ், சாய்பாபா புகுந்து மக்களின் குறைகளை போக்கி வருவதாகக் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக இது நடக்கிறது. ஒவ்வொரு வியாழக் கிழமையும ், ஆஷாவின் உடலுக்குள் பாபா புகுந்துவிடுகிறார். அதன் பிறகு அப்பெண்ணின் உடல் மற்றும் குரலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவரது நடவடிக்கை ஆணைப் போல் மாறுகிறது. புகை பிடித்தபடியே பக்தர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த ு, அதற்கான தீர்வையும் கூறுகிறாராம்.

இதுபற்றி கோயிலின் பக்தர் ரகுவீர் கூறுகையில ், " பாபா மீது கண்மூடித்தனமாக எனக்கு நம்பிக்கை உள்ளது. உண்மையான உணர்வுடன் வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. ஆனால் பாபா மீது உண்மையான பக்தி தேவை" என்றார்.

மற்றொரு பக்தர் கூறும்போத ு, “ 10 ஆண்டுகளாக பாபா கோயிலுக்கு வருகிறேன். இந்த இடம் அமைதியைத் தருகிறது. இங்கு வந்தால் மக்களுக்கு ஏதோவொன்று கிடைக்கிறது என்பது உண்மை. ஆகையால் பக்தர்கள் குவிகிறார்கள்" என்றார்.

தனது பல்வேறு மனித நேயப் பணிகள் மூலம் மக்களால ்
webdunia photoWD
சாய் பாபா நினைவுகூறப்பட்டு வருகிறார். அமைதியையும ், சகோதரத்துவத்தையும் போதிக்கும் பாபாவின் கொள்கைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. ஆனால ், மனித உடலுக்குள் பாபா வருகிறார் என்பது ஆச்சரியமாகத் தான் உள்ளது. இது பக்தியின் அடையாளம ா? அல்லது மூட நம்பிக்கைய ா? உங்கள் கருத்து என் ன? எங்களுக்கு எழுதுங்கள்!

சகல பாவங்களையும் போக்கும் திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோவில்!

தியானத்தில் ஆழ்ந்து செல்வது எப்படி? குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்!

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

Show comments