மனித உடலில் இறைத்தன்மை இருக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சாதாரண மனிதன், இறைத் தன்மை அடைந்ததும் எரியும் நெருப்பின் மீது படுத்துக் கொள்கிறான் என்றால் நம்ப முடிகிறதா?
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், சிலர் தங்களது உடலுக்குள் இறைத் தன்மை வருவதாகவும், அதன் மூலம் பலரது பிரச்சினைக்கு தாங்கள் வழி காண்பதாகவும் கூறுவதைத்தான் பார்க்கப் போகிறோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். இங்கு துர்காவின் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலில் துர்கைக்கு தீபாராதனை செய்யும்போது, அங்குள்ள சில பெண்களுக்கு துர்கையின் அருள் கிடைக்கிறது. மேலும் சில ஆண்களுக்கு துர்கையின் வாகனமாக சிங்கம் அல்லது கால பைரவரின் அருள் கிட்டுகிறது.
அந்த சமயத்தில் அவர்கள் அசாதாரணமாகக் காணப்படுகின்றனர். துர்கையையும் வழிபடுகின்றனர். அவர்கள் அருகில் இருக்கும் பக்தர்களுக்கும் ஆசி வழங்குகின்றனர்.
அப்போது அதிக பக்தி பரவச நிலையை அடையும் பக்தர்கள் சிலர் எரியும் கற்பூரத்தை தங்களது நாக்கில் ஏந்துகின்றனர். சிலரோ தங்களது கைகளில் கற்பூரத்தை ஏற்றி துர்கைக்கு தீபாராதனை செய்கின்றனர்.
webdunia photo
WD
இதுமட்டுமல்ல, துர்கையும், கால பைரவரும் உடலுக்குள் வந்ததும் அவர்கள் நடனமாடுகின்றனர், விளையாடுகின்றனர். எரியும் நெருப்புக் குழியில் வெறும் காலில் நடக்கின்றனர். நெருப்புக் குழியில் இறங்கி நடப்பதற்கு உடன் இருப்பவர்கள் உதவி செய்கின்றனர்.
உடலுக்குள் இறைத் தன்மை வருகிறது என்று கூறப்படுவது வழிபாட்டின் ஒரு முறையா? இது முற்றிலும் உண்மையானஒன்றா? அல்லது மற்ற பக்தர்களைக் கவர்வதற்காக இவர்கள் செய்யும் ஒத்திகையா? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் கருத்தை எங்களுக்கு எழுதுங்கள்.