கொக்கியில் தொங்கி செலுத்தும் நேர்த்திக்கடன்!

Webdunia
webdunia photoWD
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் வாழும் பழங்குடியினர் கால் என்ற விழாவில் செலுத்தும் விநோதமான நேர்த்திக்கடனை இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.

இலங்கையை ஆண்டதாகப் புராணங்கள் கூறும் இராவணனின் மகனான மேகநாதனை தெய்வமாக வணங்கும் இந்த பழங்குடி மக்கள், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் மேகநாதனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதே கால் விழாவாகும்.

கால் என்பது மூங்கிலால் ஆன ஒரு நீண்ட கழியாகும். நாம் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தும் ஏற்ற மரம் போல உள்ளது. அதன் முனையில் கட்டப்பட்டுள்ள கயிறுகளில் இரண்டு கொக்கிகள் தொங்குகின்றன. பிரார்த்தனை நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துபவர் முதுகில் அந்த கொக்கிகளைக் குத்துகின்றனர். அதில் அவர் தொங்கிக் கொண்டிருக்கும் போது, கால் எனும் அந்த மரம் சுழற்றப்படுகிறது. வேண்டுதலுக்கு ஏற்றவாறு இத்தனை தடவை என்று அது சுற்றப்படுகிறது.

இப்படி தங்களுடைய முதுகில் கொக்கியால் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களை படியார்கள் என்று அழைக்கின்றனர்.

இந்த நேர்த்திக்கடன் செலுத்தும்போது தங்களுக்கு எந்த வலியும் தெரிவதில்லை என்று படியார்கள் கூறுகின்றனர். இப்படி நேர்த்திக்கடன் செலுத்திய பவார் சிங் என்பவர், தனக்கு ஆண் பிள்ளை வேண்டி மேகநாதனிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அந்த பிரார்த்தனை நிறைவேறி ஓராண்டிற்குள்ளேயே தனக்கு குழந்தை பிறந்ததாகவும், அதற்காக தனது நேர்த்திக்டனை செலுத்தியதாகவும் கூறினார்.

webdunia photoWD
இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுடனோ, இலங்கையுடனோ எந்தத் தொடர்பும் அற்ற இம்மக்கள், இராவணனின் மகன் மேகநாதனை கடவுளாக வணங்குவதும் ஏன் என்று புரியவில்லை. ஆனால் இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு முன் அவர்கள் மது அருந்துகின்றனர். அதனால் அவர்களுக்கு வலி தெரியவில்லை போலும்.

நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மட்டுமல்ல, நம்மிடம் பேசிய பார்மர் சிங் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் எவ்வித பிரார்த்தனையும் இன்றி இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறுகிறார்.

கொக்கியில் தொங்குவதற்கு முன்பு சில நாட்களுக்கு அவர்களின் முதுகில் தொடர்ந்து மஞ்சள் தடவி வருகின்றனர். ஆனாலும், நேர்த்திக்கடன் செலுத்தும் படியார்கள் சிலரின் காயத்தில் இருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. இப்படிப்பட்ட பழக்கங்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் கூட உள்ளது என்று ஆங்கில மருத்துவர்கள் மிரட்டுகின்றனர். ஆனால், இது எங்களது பாரம்பரியம் என்று அதனை தவிர்க்க மறுக்கின்றனர் அம்மக்கள்.

இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

Show comments