Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸீகா வைரஸ் பக்கவாதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்த கூடும்: புதிய ஆய்வு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (19:01 IST)
ஸீகா வைரஸ் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட ஏற்படலாம் என்றும் இந்த வைரஸின் தாக்கம் தொடர்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


 

 
பிரெஞ்சு பாலினேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவ தொடங்கிய இந்த வைரஸ் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு தி லான்சட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
 
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நான்காயிரம் பேரில் ஒருவருக்கு குயில்லன்பேரி நோய்க் குறி வரும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
 
கொசுக்களால் பரவக்கூடிய ஸீகா வைரஸ் லத்தின் அமெரிக்க நாடுகளில் சமீப மாதங்களாக வேகமாக பரவிவருகிறது.
 
வளர்ச்சி குன்றிய மூளையுடன் குழந்தைகள் பிறப்பதற்கு காரணமான மைக்ரோஸிஃபில்லி நோயின் அதிகரிப்புக்கு இந்த வைரஸ் காரணமாக இருந்துள்ளது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments