Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில்

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில்
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:36 IST)
டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.


 
விருந்தாவனில் அமையவுள்ள சந்திரோதயக் கோயிலின் வடிவமைப்பை சித்தரிக்கும் கணினிப் படம்

 
இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; "விருந்தாவன் சந்திரோதயக் கோயில்" என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது.

வாடிகனில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப் பிரபலமான முக்கிய கட்டடங்களான மலேசியாவின் பெட்ரோனாஸ் டவர், தாய்வானின் தாய்பேய் 101 கட்டடம், மற்றும் தற்போதைய உலகின் மிக உயரமான கட்டடமாக இருக்கும் சவுதி அரேபியாவின் ஜெட்டா டவர் கட்டடம் உள்ளிற்ற பலவற்றிற்கு கட்டமைப்பு பொறியாளராக செயலாற்றிய தார்டன் டொமாசெட்டி உட்பட உலகின் பல முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழிட்நுட்ப வல்லுநர்கள் இந்த கட்டடம் குறித்து ஆலோசனை தந்து வருகின்றனர்.

1மீ விட்டமும் 55 மீ ஆழமும் கொண்ட 500 தூண்கள் இந்த கட்டடத்தில் அமையவிருக்கிறது.

மேலும் இந்த கோவிலைச் சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள், யமுனை நதியில் படகு சவாரி செய்வதற்கான நீர்ப்பாதைகள் மற்றும் கிருஷ்ணர் குறித்த கண்காட்சி ஆகியவை அமைய உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயில் 45 லட்சம் க்யூபிக் அடி கான்கீரீட், 19,000 டன் வலுவான எஃகு மற்றும் 6400 டன் கட்டமைப்பு எஃகால் கட்டுமானம் செய்யப்படவுள்ளது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மின் தூக்கிகளில் ஒலி, ஒளி மற்றும் டியோரம நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் மூலம் பார்வையாளர்கள் கட்டத்தின் உச்சிக்கு கூட்டிச் செல்லப்படுவார்கள் எனவே பார்வையாளர்கள் 700 அடி நீளத்திலிருந்து காட்சிகளை காணலாம்.

மேலும், இந்த கோயிலில் சூற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அடிப்படையில் கட்டடத்தை தரம் பிரிக்கும் எல்ஈஈடி [LEED] மதிப்பீடு பெறும் வகையில் கட்டமைக்கப்படவுள்ளது.

ஹரே ராமா ஹரே கி்ருஷ்ணா இயக்கத்தின் (இஸ்கான்) பெங்களூரு கிளையின் உறுப்பினர்கள் யோசனையில் இந்தக் கோயில் உருவாகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மான்கள் மூலம் பீட்சா வினியோகம்