Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: ஐ நா

Webdunia
வியாழன், 28 மே 2015 (10:45 IST)
உலகளவில் பட்னிணியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐ நாவின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.


 
கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் தொகையை கணக்கிட்டு வரும் நிலையில், அந்தத் தொகை இப்போது 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என ஐநாவின் ஒரு அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது.
 
உலகின் மக்கட் தொகை பெருகி, மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டாலும், பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதில் பெரும்பாலான நாடுகள் வெற்றி கண்டுள்ளன என்றும் ஐ நா கூறுகிறது.
 
பட்டினியிலிருந்து மக்களை விடுவிப்பது தொடர்பில் கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகள் ஆகையவை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன.
 
எனினும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பகுதியிலேயே இன்னும் உலகளவில் பட்டினியின் தாக்கம் அதிகமாக உள்ளது என ஐ நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகிறது 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments