Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் பிரதமர் ஹெலிகாப்டரை மறித்த போர் விமானங்கள்: பகீர் புகார்!!!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (08:43 IST)
சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தான் சென்ற ஹெலிகாப்டருக்கு துருக்கியின் போர் விமானங்கள் 'தொந்தரவு' கொடுத்ததாக கிரேக்க பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
நேற்று (திங்கட்கிழமை) கிரேக்கத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த துருக்கியின் போர் விமானங்கள், தனது ஹெலிகாப்டரை 'தாழ்ந்து பறக்கும்' நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி, துருக்கியின் செயலை அவர், "அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அலெக்சிஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி ராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள் வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
 
கிரேக்கம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இஜியன் தீவு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.320 குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000க்கும் கீழ்.. மக்கள் மகிழ்ச்சி..!

அதிமுக கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வருகிறது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதானி நிறுவனத்திற்கு 8 கோடி சதுர அடி நிலம் வழங்கிய அரசு: நீதிமன்றம் கண்டனம்..!

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments