Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்: கராத்தே, சர்ஃபிங், இன்னும் பிற புதிய விளையாட்டுகள் என்ன?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (13:06 IST)
நீண்ட காலம் கழித்து ஒலிம்பிக் விளையாட்டுகள் டோக்கியோவில் விரைவில் தொடங்க இருக்கின்றன.

அனைவருக்கும் 'பிடித்த விளையாட்டு' என ஒன்று இருக்கும். பல விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெற்றாலும், பிடித்தமான அந்தவொரு விளையாட்டிற்கே மக்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இந்த தாண்டு வழக்கத்தை விட, வேறு சில விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

அவை என்னென்ன விளையாட்டுகள் என்பதை இங்கே பார்க்கலாம்.

கராத்தே

ஜப்பானின் ஒகினாவா தீவில் முதன்முதலில் விளையாடப்பட்ட கராத்தேவில் இரண்டு வகை உள்ளன. ஒன்று கடா, மற்றொன்று குமிடே.

கடா - இதற்கு அர்த்தம், 'வடிவம்' அல்லது 'மாடல்'. இது தனியாக விளையாடப்படுவது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பு அசைவுகளை செய்து காட்டுவது.

குமிடே - இது இருவர் விளையாடுவது. 3 நிமிடங்கள் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் மோதிக் கொள்வது. அவர்கள் பயன்படுத்தும் அசைவுகளுக்கு ஏற்ப புள்ளிகள் கொடுக்கப்படும்.

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 80 வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றனர். 60 பேர் குமிடே வகையிலும், 20 பேர் கடா வகையிலும் கலந்து கொள்கிறார்கள். இரண்டிலும் ஆண்கள், பெண்கள் சமமாக இருக்கிறார்கள்.

ஸ்கேட் போர்டிங்

ஸ்கேட்போர்டிங்கிலும் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று Street மற்றொன்று Park.

இதில் வீரர்கள் ஒட்டுமொத்த கடின நிலை (level of difficulty) மற்றும் தங்கள் அசைவுகளின் நிலை வைத்து தனித்தனியாக மதிப்பிடப்படுவார்கள்.

ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் வீரர்கள், தண்டவாளங்கள், படிகட்டுகள், சுவர்கள், சறுக்குகள் போன்ற பல தடைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் திறமையாக கடந்துவர வேண்டும்.

பார்க் ஸ்கேட்போர்டிங் என்பது ஏதும் இல்லாத பெரிய இடத்தில் சிக்கலான வளைவுகளை தாண்டி, நடு வானில் சாகசங்கள் எல்லாம் செய்ய வேண்டும்.

இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 80 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சர்ஃபிங்

டோக்கியோவின் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுரிகஸ்கி கடற்கரையில் சர்ஃபிங் போட்டிகள் நடைபெற உள்ளன.

30 நிமிடங்களுக்குள் வீரர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு அலைகளை கடந்து பிடித்திட வேண்டும்.

பெரிய அலைகளை சாதுரியமாக கடந்த 2 புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கடின நிலை, திறன், வேகம், ஆகியவை குறித்து புள்ளிகள் மதிப்பிடப்படும்.
இதில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

பேஸ்பால் / சாஃப்ட்பால்

சரியாக சொல்ல வேண்டுமானால் இந்த விளையாட்டு ஒலிம்பிக்கில் புதிது கிடையாது. ஆனால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்தே இதில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த இரண்டு விளையாட்டுகளின் அடிப்படையும் மிகவும் எளிமையானதுதான்.

இந்த இரு விளையாட்டுகளிலும் தலா ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன. பேஸ்பால் ஆண்களால் மட்டும் விளையாடப்படும். சாஃப்ட்பால், பெண்கள் மட்டும் விளையாடுவது.

வேறு என்ன புதிய விஷயங்கள்?

ஏழு விளையாட்டுகளில் 9 கலப்புப் பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) நிகழ்வுகள் புதிதாக இம்முறை நடக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments