Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு

திப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு
, வியாழன், 12 நவம்பர் 2015 (20:27 IST)
திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.


 
 
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி என்கிற நகரில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகியது. அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.
 
முதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், மோதலில் பலியாகவில்லை என்றும், ஒரு விபத்தின் காரணமாகவே அவர் இறக்க நேரிட்டது என்றும் கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது.
 
இரண்டாவதாக இறந்தவர் கலவரத்தின் போது ஏற்பட்ட காயத்தால், இறந்ததாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் உறுதி செய்கின்றன.
 
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காக்க தவறிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
 
மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பிறந்த தின நிகழ்ச்சி, இந்த ஆண்டு முதல், கர்நாடக மாநிலத்தில் அரசு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதற்கு இந்து வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன. மாநில அரசின் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, இஸ்லாமியர்களை கவரும் நோக்கத்தில், அம்மாநிலத்தில் ஆட்சி செலுத்தும் காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தை வீண் செய்வதாக குற்றம் சாட்டியது.
 
கிரிஷ் கர்னாடுக்குக் கொலை மிரட்டல் :
 
மேலும் திப்பு சுல்தானின் பிறந்த தினம் என்பதும் கூட நவம்பர் 20 ஆம் தேதி தான் என்கிற போதிலும், அது உள்நோக்கத்துடன், தீபாவளி கொண்டாட்டத்தோடு சேர்த்து 10 ஆம் தேதியே கொண்டாடப்பட்டது என்றும் ஹிந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
திப்பு சுல்தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால், அவரது நினைவை அனுசரிப்பதை பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி அதை விமர்சனம் செய்கின்றது. அத்தோடு திப்பு சுல்தான் ஒரு மதசார்பற்ற தலைவராகவே விளங்கியதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்தான் திப்பு சுல்தான என கூறிய எழுத்தாளர் கிரிஷ் கர்னாட்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
ஞானபீட விருது பெற்றுள்ள எழுத்தாளரான கிரிஷ் கர்னாட் இது குறித்து குறிப்பிடுகையில், கெம்பே கவுடாவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை கூட சூட்டி இருக்கலாம் என கூறினார்.
 
இந்த விவகாரமும் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து கிரிஷ் கர்னாட் அதற்காக அளித்த விளக்கத்தில், பெங்களுரு உருவாக காரணமாயிருந்த கெம்பே கவுடாவை நான் குறைத்து கூறவில்லை என்றும், திப்பு சுல்தானும் கூட மதிப்பளிக்க தகுதி பெற்றவர் தான் என்று கருத்து கூறியதாக தெரிவித்தார். இதைத்தான் ஒரு சில தான் ஏதோ, கெம்பே கவுடா பெயரை நீக்கி விட்டு திப்பு சுல்தான் பெயரை அதற்கு சூட்டத் கூறியதாக மாற்றி செய்தி வெளியிட்டுள்ளனர் என்றார் எழுத்தாளரான கிரிஷ் கர்னாட்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil