இலங்கை அரசு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை பதிவு செய்ய முடிவு

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (23:58 IST)
அரசியல்வாதிகளின் பதிவுகளை உண்மை சரிபார்க்கப்போவதில்லைபட  பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
ஊடகத்துறை அமைச்சின் கீழ் இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
 
சமூக வலைத்தளங்களினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்குடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகிறார்.
 
சமூக வலைத்தள முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
 
இதன்படி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவரையும் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
 
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை வெளியிடும் மற்றும் பகிரும் நபர்கள் அண்மை காலமாக கைது செய்யப்பட்டு வந்த பின்னணியிலேயே, அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments