Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (13:23 IST)
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின், மூத்த சகோதர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர். 104 வயதான இவர்,  ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

வயது மூப்பின் காரணமாக இவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இவரது உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசல் அருகே உள்ள இடத்தில் இன்று (மார்ச் 8, திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்படவுள்ளது என அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
 
கலாமின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், தவறாமல் சென்று மரியாதை  செலுத்துவதுடன், சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்திருந்தார். மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி  நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மாணவர்களிடையே உரையாற்றுகையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார்.
 
இதையடுத்து, அப்துல் கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட  பேக்கரும்பில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு பின் அந்த இடத்தில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு  வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவை அங்கு  வைக்கபட்டடுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments