காஷ்மீரில் பனிச்சரிவு : 10 இந்திய வீரர்களைக் காணவில்லை

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2016 (20:25 IST)
காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.


 

 
ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடிவருவதாக, ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்டி கோஸ்வாமி தெரிவித்திருக்கிறார்.
 
புதன்கிழமையன்று அதிகாலையில், சியாச்சினின் வடபகுதியில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்ட அங்கிருந்த ராணுவ காவல்தளத்தை மூடியது.
 
உலகின் மிக உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் சியாச்சினில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் படையினரும் தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கிங் மேக்கர் இல்லை.. நிச்சயம் ஆட்சி அமைப்பேன்: விஜய் முதல்முறையாக ஊடகத்திற்கு அளித்த பேட்டி..

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.. செங்கோட்டையன்

கல்லூரிகளில் கல்விக்கட்டணம் ரத்து.. இலவச கல்லூரி கல்வி வழங்கும் முதல் மாநிலம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 4.25 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய நிலையில் எத்தனை பேர் பாஸ்?

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

Show comments