பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (07:52 IST)
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.
 
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
 
சமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
 
சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்.
 
கடந்த வியாழன்று, இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
2017இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் (2.0C) வெப்பத்துக்கு மிகாமல், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த 200க்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
 
இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments