Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதைப் பொருள் கடத்தல்: 5 இந்தியர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

போதைப் பொருள் கடத்தல்: 5 இந்தியர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு
, வியாழன், 30 அக்டோபர் 2014 (19:50 IST)
இலங்கையில் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
 
தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சார்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் என இந்திய வெளியுறவுச் செயலர் செய்யது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்துப் பிடிபடுவதும் நடந்துவருகிறது.
 
தண்டனை வழங்கப்பட்ட இந்தயர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்டுள்ள எட்டு பேரும் கடந்த 2011ஆம் ஆண்டு வட இலங்கையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி சட்ட மா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
வழக்கு விசாரணையின்போது ஆட்சேபனையொன்றைச் சமர்ப்பித்த சந்தேக நபர்கள், கைது செய்யப்படும்போது தாங்கள் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் இருக்கவில்லை என்று தெரிவித்தனர். எனவே தங்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபருக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் வாதிட்டனர். எனவே தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 
 
ஆயினும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாட்சியங்களைச் சமர்ப்பித்த அரச தரப்பு வழக்கறிஞர், சந்தேக நபர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 
 
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபர்களுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். எனவே சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். 
 
இலங்கை வரலாற்றில் குற்றச்சாட்டு ஒன்றை நிரூபிக்க, GPS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதென்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil