Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரிய சக்தியில் இயங்கும் விமானம் : வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

சூரிய சக்தியில் இயங்கும் விமானம் : வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
, செவ்வாய், 3 ஜூன் 2014 (15:26 IST)
சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி பறக்கவிருக்கின்ற நிலையில், பரிசோதனை வெள்ளோட்டமாக சுவிட்சர்லாந்தில் அவ்விமானம் முதல் முறையாக பறக்கவிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு அமெரிக்காவில் பறந்த சோலார் இம்பல்ஸ் 1 என்ற விமானத்தின், பெரிய மற்றும் மேம்பட்ட வடிவமைப்பில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு, சோலார் இம்பல்ஸ் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
வடிவ அமைப்பில் இந்த விமானம் ஏற்கனவே பல உலக சாதனைகளை பெற்றுள்ளது. மனிதர்களை சுமந்து கொண்டு இந்த விமானம் தொடர்ந்து 26 மணி நேரம் பறந்துள்ளது.
 
மாற்று எரிசக்தியின் எல்லைகளை விரிவுபடுத்த விரும்புவதாக இந்த விமானத்தின் விமானிகளான பெர்ட்ராண்ட் பிக்கார்ட் மற்றும் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் ஆகியோர் கூறுகின்றனர்.
 
கரிம இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகள் போயிங் 747 ரக விமானத்தின் இறக்கைகளை விட அகலமானவை, ஆனால் இந்த விமானத்தின் எடையோ ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.
 
இந்த விமானம் அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி பறக்கவிடப்பட உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil