Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் [வீடியோ]

தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் [வீடியோ]
, வியாழன், 26 நவம்பர் 2015 (20:10 IST)
நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.
 

 
அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும், சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
 
இந்த திரவம், திரைகளாக, குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது.
 
இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீர்மானிக்கிறது. இதை வைத்துத்தான் தும்மல் எப்படி வியாதிக்கிருமிகளை பரப்புகிரது என்பதைக் கண்டறிய முடிகிறது.
 
இந்த ஆய்வின் நோக்கமே, இந்த தும்மலின் திரவ வெளியேற்றத்தை வடிவமைப்பது மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான். இது போஸ்டன் நகரில் அமெரிக்க உடலியல் கழகத்தின் திரவ இயங்கியல் பிரிவின் கூட்டமொன்றில் காட்டப்பட்டது.
 
தும்மல் உருவாக்கும் மேகம் போன்ற மண்டலத்தைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், அவைகளின் முடிவுகள் மாறுபட்டிருந்தன. ஏனென்றால், தும்மலின் முதல் கட்ட வெளியேற்றம் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருந்தது என்கிறார் இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவர், மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் லிடியா பூருபா.
 
"அந்தப் பகுதி இன்னும் பெரிய அளவுக்கு தெரியாத ஒன்றுதான். இந்தத் துளிகள் எப்படி உருவாகின, அவை பரவும்போது எந்த அளவுடன் பரவுகின்றன? தும்மும்போது, வாயின் அருகே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன்" என்றார் அவர்.
 
ஆனால் வீடியோவில் அவர்கள் தும்மலின்போது ஏற்படும் நீர்த்திவலைகள் வெவ்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் இருப்பதை மட்டும் பார்க்கவில்லை. அவை சுவாசப் பாதைக்கு வெளியேயும் உடைந்து சிதறும் வழிமுறை தொடர்வதைப் பார்த்தார்கள்.
 
நீர்த்திவலைகள், அருவி நீர் போல பரவுவதைப் பார்த்தார்கள். இந்த திரவப் பரவல் இதுபோல பல்வேறு வடிவங்களை எடுப்பதை சில தொழிற்சாலை சூழல்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
 
ஆனால் தும்மல் போன்ற மனித உடலியல் சார்ந்த ஒரு வழிமுறையில் இது போன்ற திரவப் பரவல் ஏற்படுவதைப் பார்ப்போம் என்று தோன்றவில்லை என்கிறார் அவர்.
 
இந்த தகவல் இப்போது கிடைத்திருக்கும் நிலையில், நோய் தொற்றல் என்பதன் "காலடிச்சுவட்டை" பற்றி கணிப்பதற்குத் தேவைப்படும் நீர்த்திவலைகளின் உருவாக்கம் பற்றிய வடிவமைப்பைச் செய்ய விஞ்ஞானிகளால் இனி முடியும்.

வீடியோ கீழே:
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil