Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் 'ஆயுள்' குறித்த கவலைகள்

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் 'ஆயுள்' குறித்த கவலைகள்
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:25 IST)
வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும், அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன.


 
இறங்கியதிலிருந்தே அது குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்திருக்கிறது என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் இதன் முக்கிய மின்கலம் (பேட்டரி) இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
 
இதற்கு மாற்றாக மின்சக்தியை வழங்க ஃபைலே கலனில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தாலும், இந்த கலன் இறங்கிய இடம் நிழலாக இருப்பதால் அந்தத் தகடுகள் வேலை செய்யவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
இந்த ஆய்வுக்கலனை கவனமாக வேறு ஒரு நல்ல இடத்துக்கு நகர்த்த தாங்கள் முயலப்போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
இதைச் செய்ய முடியாவிட்டால் கூட, இந்த ஆய்வுக்கலன் சூரியனை நெருங்கும் போது, அதன் சூரியத் தகடுகள் விழித்தெழும் வாய்ப்பு இருக்கிறது.
 
அதன் முதல் வேலை நாளில், ஃபைலே கலன் இந்த வால்நட்சத்திரத்தின் அமைப்பையும், அதன் காந்தப்புலனையும் வரைபடமாக்கியிருக்கிறது.
 
இந்த ஆய்வுக்கலனை அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து நகர்த்துவதன் மூலம் மேலும் சில கருவிகளை இயக்கவைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil