Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழு வயதில் பாலியல் கல்வி - இங்கிலாந்தில் கோரிக்கை

ஏழு வயதில் பாலியல் கல்வி - இங்கிலாந்தில் கோரிக்கை
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (06:03 IST)
பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணிஅரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது.

வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்)கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது.

லிபரல் டேமாக்ரட்ஸ் தேர்தல் திட்டத்தின்படி, 7 முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு செக்ஸ் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என்று லிபரல் டேமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவிட் லாஸ் கூறியுள்ளார்.

தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது, ஆனால் பிரிட்டிஅரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களிலும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் செக்ஸ் கல்வி சொல்லித் தரப்படுவதில்லை.

பாலியல் கல்வி ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் சொல்லித்தரப்படாவிட்டாலும்,
ஏழாம் வகுப்பு முதல் கற்பிக்கும் உயர்நிலைப்பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயம் சொல்லித் தரப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil